பிடிக்காத நடிகை லைலா தான்.. கன்னக் குழியழகி குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்
லைலா
90களில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் லைலா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.
தமிழில் கள்ளழகர், முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், த்ரீ ரோசஸ், கம்பீரம், உள்ளம் கேட்குமே, பரமசிவன் போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
இடையில் திருமணம் செய்து குழந்தைகள் என கேமரா பக்கம் வராமல் இருந்தவர், சர்தார் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். லைலாவும் ஷாமும் இணைந்து உள்ளம் கேட்குதே என்ற படத்தில் நடித்திருந்தனர்.
ஓபன் டாக்
இந்நிலையில், நடிகை லைலா குறித்து நடிகர் ஷ்யாம் பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " எனக்கு பிடிக்காத நடிகை என்றால் அது நடிகை லைலா என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் உள்ளம் கேட்குதே படத்தில் ஒரு மாதிரி இரிடேட் பண்ற கேரக்டரில் லைலா நடித்திருப்பார்.
அதனால் படம் முழுக்க அப்படியே தான் வருவார். இதனால் ஒரு கட்டத்தில் இனி அவருடன் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால், நிஜத்தில் மிகவும் ஜாலியான கேரக்டர் லைலா" என்று தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
