குடும்பத்திற்காக அடிவாங்கிய நடிகர் செந்தில்.. மகன்கள் கேட்ட அந்த கேள்வி? உருக்கமான பேச்சு
செந்தில்
80ஸ் காலகட்டத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கி, நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் செந்தில். அதுவும் கவுண்டமணி - செந்தில் காம்போ என்றால் சொல்லவே தேவையில்லை.

நடிகர் செந்தில் 1979-ல் வெளிவந்த 'பசி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் நடித்து வந்த செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து செய்த நகைச்சுவை தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தது.

இன்றும் இவர்களுடைய நகைச்சுவை காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டால், அதைப்பார்த்துவிட்டு தான் மறுவேலை செய்பவர்களும் உண்டு. மேலும் இவர்களுடைய நகைச்சுவைகளை இணையத்தில் தேடி பார்த்து மகிழ்பவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உருக்கமான பேச்சு
நடிகர் செந்தில் கடந்த 1984-ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் செந்திலின் மகன் தனது தந்தை தங்களுடைய குடும்பத்திற்காக பட்ட கஷ்டத்தை பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "நாங்கள் சிறு வயதில் அப்பாவிடம், 'ஏன் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்க? ஒரு முறையாவது திருப்பி அடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமே?' என்று கேட்போம். அதற்கு செந்தில், "இயக்குநரின் கற்பனையை மாற்ற சொல்ல முடியாது" என கூறுவார். இப்போது திரும்பி பார்க்கும்போதுதான், எங்க குடும்பத்திற்காக அப்பா அந்த கஷ்டமான கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்று நடித்துள்ளார் என புரிகிறது" என கூறியுள்ளார்.