வாழைப்பழம் காமெடி புகழ் நடிகர் செந்தில் வாழ்க்கை வரலாறு
நடிகர் செந்தில்
செந்தில், முனுசாமி என்ற இயற்பெயர் கொண்ட காமெடி கிங். இராமநாதபுரம், முதுகுளத்தூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் ராமமூர்த்தி-திருக்கம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர்.
தனது அப்பா அவமதித்த காரணத்தால் தன்னுடைய 12ம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார்.
முதலில் எண்ணெய் ஆட்டும் நிலையத்திலும், மதுபான கடையிலும் பணிபுரிந்துள்ளார். நாடகத் துறையில் இணைந்து தன்னுடைய நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்ட இவர் திரைத்துறையில் முதலில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
1983ம் ஆண்டு மலையூர் மம்பட்டியான் படத்தின் மூலம் திரைத்துறையினரை கவர்ந்தார்.
குடும்பம்
1984ல் கலைச்செல்வியை மணந்தார், அவருக்கு டாக்டர் மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளனர்.
படங்கள்
ஹிட் படங்கள் இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
கவுண்டமணி-செந்தில் இருவரும் இணைந்து நடிக்காவிட்டாலும் 1000 வருடங்கள் கடந்தாலும் இவர்களது காமெடிகள் மக்களிடம் நிலைத்து நிற்கும்.