தாலியை அடமானம் வைத்து ஆபரேஷன், சேது செய்த செயல்.. மறைந்த நடிகரின் மனைவி உருக்கம்
சேதுராமன்
தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் சேதுராமன்.
சக்கை போடு போடு ராஜா, வாலிபராஜா, 50/50 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மருத்துவரான இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் படங்களில் நடித்து வந்தார். மருத்துவரான இவர் இளம் வயதிலேயே உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நடிகரின் மனைவி
நடிகர் சேதுராமன் இறந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மனைவி உமயாள் தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார் சேது, அவர் போல யாரையும் பார்க்க முடியாது.
கிளினிக் போகும்போது என்னை கூட்டி செல்வார். அப்போது ஒருநாள், ஒரு பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் பண்ணும்போது தாலியை அடமானம் வைத்து ஃபீஸ் கட்டியதை தெரிந்துகொண்ட சேது உடனே அவங்க கொடுத்த காசு வேண்டாம் என சொல்லிட்டாரு.
அந்த தாலியை மீட்டு கழுத்தில் போட்டுக்கொள்ளுங்கள் என கூறி அவங்களுக்கு உதவியாக ரூ. 5000 பணம் கொடுத்து அனுப்பினார். சேதுவை பார்த்து பல இடங்களில் பிரமித்து போனேன்.
மருத்துவராக மட்டும் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு இருப்பது வியக்க வைத்தது என தெரிவித்திருக்கிறார்.