நடிகர் விஜய்யின் சீக்ரெட் டயட் பிளான் குறித்து பேட்டியில் கூறிய பிரபலம்- என்ன சாப்பிடுகிறார் பாருங்க
விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இந்த வருடம் விஜய் குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குடும்பம், சென்டிமென்ட் கலந்து படமாக அமைய முதல் வாரத்தை அடுத்து இப்படத்தை நிறைய பேர் குடும்பமாக வந்து காண ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் தான் கொடுத்து வருகிறார்கள்.
11 நாளிலேயே படம் உலகம் முழுவதும் ரூ. 250 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் எல்லாம் வந்தது.
நடிகரின் டயட்
படம் ஒருபக்கம் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்க, இப்படத்தில் நடித்த பிரபலங்களின் பேட்டிகளும் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஒரு பேட்டியில் நடிகர் ஷ்யாம் விஜய்யின் டயட் பிளான் குறித்து கூறியுள்ளார்.
அதில் அவர், காலையில பொங்கல் சாப்பிட்டேன் டா, இரண்டு பூரி, மதியம் சப்பாத்தி, சிக்கன், கொஞ்சம் சாதம், மாலையில் மூடு நல்லா இருந்தா சாதம், இல்லேன்னா சப்பாத்தி" என்று விஜய் அவர்கள் கூறுவார்.
இயல்பாக சாப்பிடும் சாப்பாடு அது. புரொடக்ஷன்க்கு என்ன உணவு வருதோ அதை தான் விஜய் சாப்பிடுவார் .நன்றாக சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் விஜய் அவர்கள் போல் இருக்கலாம், ஆனால் நாம் அதை செய்ய மாட்டோம் என ஷ்யாம் பேசியுள்ளார்.
திடீரென கட்டுடன் வீட்டில் நடிகை குஷ்பு, என்ன ஆனது?- அவரே வெளியிட்ட புகைப்படம்

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
