60 வயதாகும் நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஹாலிவுட் நடிகர்களை விட அதிகம்
ஷாருக்கான்
இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஷாருக்கானின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

சொத்து மதிப்பு
ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) என கூறப்படுகிறது. இதன்மூலம் உலகளவில் புகழ் பெற்ற பலரையும் பணக்காரர் பட்டியலில் பின்னுக்கு தள்ளியுள்ளார் ஷாருக்கான். பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அவர்களின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர், பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் சொத்து மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஷாருக்கான், சினிமா மூலமாக மட்டுமின்றி பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். ரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட் எனும் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு சொந்தமாக உள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் முன்னனிலையில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஆவார்.

இந்த அணி இதுவரை மூன்று முறை கோப்பை வென்றுள்ளது. மேலும், மும்பை, அலிபாக், போன்ற நகர்களில், பிரிட்டன், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர் ஷாருக்கான் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். இந்த வருமானங்கள் அனைத்தும் அவரது சொத்து மதிப்பு ரூ. 12,490 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.