நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் அணிந்துவந்த T-Shirt விலை இத்தனை ஆயிரமா?
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.
கடைசியாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜீரோ என்ற படத்தில் நடித்தார், பின் இடையில் கொரோனா காலம், அதன்பின் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்தார்.
சில வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் முதல் நாளில் 7500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருந்தது. இப்போது அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு அடுத்தப்படியாக நடிகை டாப்ஸியுன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு துங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் போட்டோ
படப்பிடிப்பின் போது அமெரிக்காவில் ஷாருக்கானுக்கு மூக்கில் அடிபட சர்ஜரி செய்யப்பட்டது. அண்மையில் மும்பை திரும்பிய போது ஷாருக்கான் அணிந்திருந்த டி-ஷர்ட் விலை குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவுகிறது.
அதாவது ஷாருக்கான் அணிந்து வந்த டீ ஷர்ட் ஹராட்ஸ் பிராண்ட் என்றும் அதன் விலை 1094 அமெரிக்க டாலர்கள் என்றும் இந்திய மதிப்பில் ரூ.89 ஆயிரம் என்கின்றனர்.

பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?