சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல நடிகர் ஷ்யாம்... எந்த டிவி தொடர் தெரியுமா?
நடிகர் ஷ்யாம்
விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் ஹிட்டடித்துவிட்டால் அதே பெயரில் புதிய கதைக்களத்தில் தொடர் ஒளிபரப்பாவது வழக்கம்.
அப்படி முதல் பாகம் ஹிட்டடித்து இரண்டாவது பாகமும் ஒளிபரப்பான தொடர் தான் ஈரமான ரோஜாவே. இந்த தொடரில் அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் ஷ்யாம்.
இந்த தொடர் மூலம் அதிகம் பிரபலமானவர் அதன்பிறகு சிறப்பு தோற்றத்தில் சீரியல்கள் நடித்து வந்தார்.
புதிய தொடர்
இந்த நிலையில் நடிகர் ஷ்யாம் ஜீ தமிழின் ஹிட் சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.
அது வேறு எந்த சீரியலும் இல்லை, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இதயம் தொடரில் அழகர் என்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறாராம்.
இந்த செய்தி கேட்டு ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.