நடிகர் சித்தார்த்துக்கு என்ன ஆனது? லண்டனில் திடீரென நடக்கும் அறுவை சிகிச்சை
நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக இருந்தவர். பின் அந்த இமேஜை உடைத்து கதையுள்ள படங்களாக நடித்து இப்போது சாக்லெட் பாய் இமேஜை உடைத்துள்ளார்.
படங்களை தாண்டி டுவிட்டர் பக்கத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பதிவு செய்வதால் தான் மக்களிடம் அவர் அதிகம் பேசப்பட்டார்.
மனதை பட்டதை கூறியதால் பல பிரச்சனைகளையும் அவர் சந்தித்திருக்கிறார்.
சித்தார்த் இப்போது மகா சங்கமம் என்ற படத்தில் நடித்திருக்கிறார், படம் வரும் அக்டோபர் 14ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இப்பட இயக்குனர் அஜய் பூபதி பேசும்போது, நடிகர் சித்தார்த்திற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
எனவே தான் அவரால் இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் சித்தார்த்திற்கு என்ன ஆனது, எதற்காக அறுவை சிகிச்சை என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.