ஈரமான ரோஜாவே 2 புகழ் சித்தார்த் நடிக்கும் புதிய சீரியல்- நாயகி மற்றும் தொடர் பெயர் தெரியுமா?

Yathrika
in தொலைக்காட்சிReport this article
சித்தார்த்
தமிழ் சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரை மக்கள் நீண்டகாலம் நியாபகம் வைத்திருப்பார்கள். காரணம் அவர்களை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்க்க அப்படியே மனதில் பதிந்து விடுகிறார்கள்.
அதிலும் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை மக்கள் பாலோ செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படி மக்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சித்தார்த் குமரன்.
றெக்க கட்டி பறக்குது மனசு, தேன்மொழி BA, ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரியல்களில் நாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சித்தார்த் குமரன். தற்போது அவர் கமிட்டாகியுள்ள புதிய தொடர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
புதிய தொடர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த புதிய தொடரை முத்தழகு தொடர் இயக்குனர் தங்கராஜ் தான் இயக்குகிறாராம்.
பனிவிழும் மலர்வனம் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சித்தார்த் ஜோடியாக வினுஷா நடிக்க இருக்கிறாராம்.