நடிகர் சிம்புவின் பிட்னஸ் சீக்ரெட், டயட் பிளான் என்ன தெரியுமா?... அவரே சொன்ன விஷயம்
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி வழியை வைத்து அதில் பயணித்து வருபவர் தான் நடிகர் சிம்பு.
குழந்தை நட்சத்திரமாக சினிமா களத்தில் களமிறங்கியவர் இப்போது வரை வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
ஆனால் அவரது பயணத்தில் சிம்பு பார்க்காத வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. அதேசமயம் அவரைப்போல சர்ச்சைகளை சந்திக்காதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

சிம்பு நடிப்பில் அடுத்து அரசன் படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங், ஆனால் படம் தற்போது பிரச்சனையில் உள்ளது.
பிட்னஸ் சீக்ரெட்
சில வருடங்களுக்கு முன்பு படு குண்டாக காணப்பட்ட நடிகர் சிம்பு கொரோனா காலத்தை பயன்படுத்தி தனது உடல் எடையை சுத்தமாக குறைத்துவிட்டார். தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள சிம்பு இப்போதும் நிறைய டயட் இருக்கிறாராம்.

தனது உடம்பிற்கு செட் ஆகாத உணவுகளை தவிர்த்து உணவில் நிறைய மாற்றம் கொண்டு வந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், அசைவம் சாப்பிட்ட பிறகு நான் மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் உணர்ந்ததால் சைவ உணவிற்கு மாறினேன். சைவம் சாப்பிடும்போது உடல் மிகவும் லேசாக இருப்பதை உணர்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட வயது வரை நாம் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஆனால் ஒரு வயதிற்கு பிறகு நாம் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.
எனக்கு சோறு சாப்பிட மிகவும் பிடிக்கும், ஆனால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவை உணர்த்துகிறது, எனவே நான் முதலில் காய்கறிகளைச் சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு சோறு சாப்பிடுகிறேன் என கூறியுள்ளார்.
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu