மீண்டும் உடல் எடையை அதிகரித்த நடிகர் சிம்பு.. காரணம் இதுதானா

By Kathick Jul 20, 2022 05:00 AM GMT
Report

நடிகர் சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது மாநாடு.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்தாக மஹா எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன்பின், வெந்து தணிந்தது காடு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

மீண்டும் உடல் எடையை அதிகரித்த நடிகர் சிம்பு.. காரணம் இதுதானா | Actor Simbu Weight Gain Again

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல் இப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

உடல் எடையை அதிகரித்த சிம்பு

இப்படம், கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சமீபத்தில் மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்த சிம்பு, தற்போது பத்து தல படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரித்துள்ளார்.

அவருடைய சமீபத்திய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

மீண்டும் உடல் எடையை அதிகரித்த நடிகர் சிம்பு.. காரணம் இதுதானா | Actor Simbu Weight Gain Again

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US