மறைந்த அப்பா கையில் தனது மகனை பார்த்ததும் கண் கலங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்- வைரலான வீடியோ
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தென்னிந்திய சினிமா கொண்டாடும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். இப்போது எவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறாரோ அதைவிட ஆரம்ப காலத்தில் கஷ்டங்கள் அதிகம் அனுபவித்துள்ளார்.
மிமிக்ரி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு அந்த துறையில் சாதிக்க பல பயிற்சிகள் எடுத்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தனது வருங்காலத்திற்காக அழகாக பயன்படுத்தி ஒவ்வொரு லெவலாக வளர்ந்து இப்போது இந்த இடத்தில் இருக்கிறார்.
எதிர்காலத்திற்காக ஒருபக்கம் கஷ்டப்பட்டு போராடி வந்த சிவகார்த்திகேயனுக்கு வாழ்க்கையில் நடந்த முகப்பெரிய சோகம் என்றால் அது அவரது தந்தையின் மரணம் தான்.
எப்போதும் சிவகார்த்திகேயன் முக்கியமான மேடைகளில் தனது அப்பாவை குறித்து பேசுவது வழக்கம் தான்.

சிவகார்த்திகேயன் எமோஷ்னல்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷனுக்காக சிவகார்த்திகேயன் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அப்போது ஒரு பேட்டியில், எனது மகனை அப்பா கொஞ்சுவதை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆசையை ஒரு ரசிகர் புகைப்படத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தார். அதைப்பார்த்ததும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை, அவ்வளவு இன்ப அதிர்ச்சியாக சந்தோஷமாக இருந்தது என கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமாவின் மகனா இது?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, போட்டோ இதோ