முருகதாஸின் அடுத்த தமிழ் படம்! ஹீரோ இவர்தான்?
சிவகார்த்திகேயன்
தொலைக்காட்சியில் பணியற்றி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக் அறிமுகமானார்.
இதன் பின் இவர் படிப்படியாக பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் மட்டுமின்றி பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என அனைத்திலும் ஆல் ரவுண்டராக இருக்கிறார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதையடுத்து இவர் அயலான், மாவீரன் போன்ற பல படங்களை லைன்அப் வைத்துள்ளார்.
முருகதாஸ் உடன் கூட்டணி?
இந்நிலையில் தீனா, ஏழாம் அறிவு, துப்பாக்கி போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸுடன் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.
கடைசியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் 2 வில் இணைகிறாரா முக்கிய பிரபலம்? மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்