அண்ணா யுனிவர்சிட்டி விவகாரம், கோவில் சென்ற சிவகார்த்திகேயன் சொன்ன பதில்.. என்ன தெரியுமா?
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் வெற்றிப் படமாக அமைந்துள்ளது அமரன்.
விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் என எல்லா விஷயங்களில் மாஸ் காட்டி 2024ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துவிட்டது. சிவகார்த்திகேயன் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.
இப்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார்.
நடிகரின் பதில்
இதனிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனை குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளதாகவும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பேசிய அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் தான் அனைவரும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.