54 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?- முதன்முறையாக கூறிய எஸ்.ஜே.சூர்யா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா
துணை இயக்குனராக இருந்து பின் இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து முதன்முதலாக இயக்கிய வாலி திரைப்படம் மாபெறும் வெற்றியடைய மக்களின் கவனத்தை பெற்றார்.
அடுத்த படத்திலேயே விஜய்-ஜோதிகாவை வைத்து குஷி என்ற படத்தை கொடுக்க இப்போதும் அப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் பேவரெட்டாக உள்ளது. பின் நியூ என்ற படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாக நடித்தார்.
சைன்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்ட இப்படம் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றது.
அதன்பிறகு அவர் இயக்கிய படங்கள் தோல்வியை சந்திக்க சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் இப்போது ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார்.
திருமணம்
நியூ என்ற படத்தை இயக்கி நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் முதலீடு செய்தேன். அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது, ஒருவேளை அப்படம் தோல்வி அடைந்திருந்தால் என் நிலைமை மோசமாகி இருக்கும்.
அப்படி மோசமானால் அது என்னுடன் போயிருக்கும், ஒருவேளை திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் என இருந்தால் அது அவர்களையும் பாதிக்கும் என பேசியுள்ளார். நான் சினிமாவில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளேன் என்கிறார்.
அநியாயமாக ஏமாந்த பிக்பாஸ் புகழ் ஜுலி- கண்ணீர் மல்க அவரே சொன்ன தகவல்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
