நடந்த தவறுக்கு ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி... என்ன ஆனது?
நடிகர் சூரி
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து, படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தலைக்காட்ட ஆரம்பித்து இன்று மக்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார் சூரி.
ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்று வந்தவர் இப்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். கடைசியாக சூரி நடிப்பில் மாமன் படம் வெளியாகி இருந்தது, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மன்னிப்பு
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படமான மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். மகிமா நம்பியார் நாயகியாக நடிக்க சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மீனவர்களின் படகு போட்டியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரசிகர்கள் ஒருவர், எங்களது ஊரில் உங்கள் பட படப்பிடிப்பு நடப்பது மகிழ்ச்சி.
இரவுநேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவிற்கு நடிகர் சூரி, தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
இதை தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம், எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம், மீண்டும் நன்றி என பதிவு செய்துள்ளார்.