நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் 'கருடன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ்
சூரியின் கருடன்
இயக்குநர் R S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருடன்'.
இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு பணிகளை கையாள, ஜி. துரைராஜ் கலை இயக்க பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் சூரி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றமும், வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய காணொளியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
சூரி - சசிகுமார் - உன்னி முகுந்தன்- சமுத்திரக்கனி - R S. துரை செந்தில்குமார் என நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்து, 'கருடன்' திரைப்படத்தை உருவாக்கி இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)