பல உணவகங்களை திறந்து வரும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் சூரி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துவந்த சூரியின் பரோட்டா காமெடி பெரிய ரீச் கொடுத்தது.
அப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் அவரது வேடத்திற்கு என்றே தனி காட்சிகள் இருந்தன.
இப்போது நாயகர்களுக்கு இணையாக எல்லா படங்களிலும் முழுவதும் வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
சூரியின் சொத்து மதிப்பு
இவர் தனது சொந்த ஊரான மதுரையில் அடுத்தடுத்து நிறைய உணவகங்கள் திறந்து வருகிறார். உணவு இன்றி கஷ்டப்படுபவர்களுக்கும் குறைவான விலையில் உணவு கொடுத்து உதவி வருகிறார்.
அப்படி தனது உழைப்பின் மூலம் பெரிய அளவில் வளர்ந்துள்ள நடிகர் சூரியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 40 கோடி வரை கூறப்படுகிறது.