மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ
சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் சூரி. புரோட்டா சூரி என ரசிகர்கள் அழைக்கப்பட்ட வந்த நிலையில் இன்று ஹீரோ சூரி என அழைக்கப்படுகிறார்.
வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்து விடுதலை நடிகர் சூரியை கதையின் நாயகனாக மாற்றியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் வெளிவந்த கருடன் திரைப்படம் சூரியை கதாநாயகனாகவே மாற்றிவிட்டது.
வெறித்தனமான நடிப்பில் நம் அனைவரையும் அசரவைத்துவிட்டார். அடுத்ததாக விடுதலை இரண்டாம் பாகம், கொட்டுகாளி, ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.
சொத்து மதிப்பு
தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சூரியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் சூரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் சூரிக்கு மதுரையில் சொந்தமான ஹோட்டல் ஒன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
