எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை, சூரி வெளியிட்ட வீடியோ- ஓட்டு போடலயா?
தேர்தல்
தமிழகத்தில் 39வது பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது கடமையை செய்து வருகிறார்கள்.
டாப் பிரபலங்களான ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, குஷ்பு, ஆண்ட்ரியா, த்ரிஷா, வெற்றிமாறன், பா.ரஞ்சித், அனிருத் உள்ளிட்ட பலரும் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.

வருத்தத்தில் சூரி
இந்த நிலையில் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரி ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன், ஆனால் இந்த முறை என்து பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர், எனது மனைவியின் பெயர் உள்ளது.
ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது, எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை, வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
எல்லோரும் வாக்களியுங்கள்? pic.twitter.com/Yw6Xk0Hgsn
— Actor Soori (@sooriofficial) April 19, 2024
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri