மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக நடிகர் சூரி கொடுத்த தொகை- உதயநிதி போட்ட டுவிட்

Yathrika
in பிரபலங்கள்Report this article
மிக்ஜாம் புயல்
தமிழ்நாடு என்றாலே முதல் அடையாளம் சென்னை தான், ஆனால் இப்போது அழகிய சென்னையாகவே இல்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தானே, மிக்ஜாம் புயல் அதன் கோர தாண்டவத்தை காட்டிவிட்டு சென்றுள்ளது.
இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர், வீடு, சாப்பாடு, ஆடை, கரெண்ட் என எதுவும் இல்லாமல் தவிக்க அரசும், தனியார் நிறுவனங்களும், பிரபலங்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் இன்னமும் புயலின் தாக்கம் நீங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
சூரி கொடுத்த நிதி
புயல் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்தவுடனே சூர்யா மற்றும் கார்த்தி ரூ. 10 லட்சம், நடிகர் விஷ்ணு ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் என வெள்ள நிவாரண நிதி கொடுத்தனர்.
இந்த நிலையில் நடிகர் சூரியும் தனது சார்பிலும் தான் நடத்தி வரும் மதுரை அம்மன் உணவகம் சார்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பத்து லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் @sooriofficial மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள… pic.twitter.com/ZGxm9bnm5P
— Udhay (@Udhaystalin) December 14, 2023