விடுதலை படத்திற்காக மொத்தமே சூரி இவ்வளவு தான் சம்பளம் பெற்றாரா?
விடுதலை திரைப்படம்
வெற்றிமாறன் அவர்கள் வருடா வருடம் ஒரு படம் கொடுத்து விட வேண்டும் என்று நினைப்பவர் இல்லை. ஒரு படம் மக்களுக்கு கொடுத்தாலும் அதைப்பற்றி அவர்கள் பல வருடங்கள் பேசும் படமாக இருக்க வேண்டும் என தரமான படங்களாக கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் அவரது இயக்கத்திலும் முதன்முறையாக காமெடியன் சூரி அட்டகாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நாயகன் வேடத்தில் நடித்துள்ள விடுதலை சமீபத்தில் வெளியானது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 14 கோடியும் உலகம் முழுவதும் ரூ. 23 கோடியும் வசூல் செய்துள்ளது. படம் நாளுக்கு நாள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதால் விரைவில் ரூ. 50 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.

சம்பளம்
இப்படத்திற்காக சூரி காமெடி வேடத்தில் நடிக்க வேண்டிய பல படங்களை இப்படத்திற்காக விட்டுக் கொடுத்துள்ளார்.
காமெடியனாக நடிக்கும் படங்களில் வாங்கிய சம்பளத்தை விட ஹீரோ அந்தஸ்து வர வேண்டும் என்பதற்காக இப்படத்தில் கடுமையாக உழைத்து சம்பளமும் குறைவாக வாங்கியதாக கூறப்படுகிறது.
வெறும் ரூ. 30 லட்சம் தான் இப்படத்திற்காக சூரிக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் தகவல் வலம் வர அது முழுக்க முழுக்க வதந்தி என தெரிகிறது.
இரண்டு பாகங்கள் சேர்த்து நடிகர் சூரிக்கு கணிசமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.