மஞ்சிம்மல் பாய்ஸ் புகழ் சவுபின் சாஹிர் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ
சவுபின் சாஹிர்
தமிழ் சினிமாவில் இப்போது லேட்டஸ்ட் டிரெண்டிங் நடிகராக உள்ளார் சபுவின் சாஹிர்.
காரணம் சமீபத்தில் இவரது நடனத்துடன் வெளியான மோனிகா பாடல் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர் என பலர் நடிக்க தயாராகியுள்ள படம் கூலி.
இப்படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல் சமீபத்தில் வெளியாக இதில் பூஜா ஹெட்ச் நடனத்தை தாண்டி சவுபின் மக்களிடம் கவனம் பெற்றுள்ளார்.
குடும்பம்
ரஜினியுடன் முதல் நாள் படப்பிடிப்பில் நடிக்க பயந்ததாகவும், பின் அவர் சகஜமாக்கினார் என சவுபின் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த கூலி படத்திற்கு முன் சவுபின் சாஹிர் மஞ்சிம்மல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலமானார்.
மோனிகா பாடல் ஒருபக்கம் டிரெண்டாகி வர இன்னொரு பக்கம் சவுபின் சாஹிர் குடும்ப போட்டோ வைரலாகி வருகிறது.
இதோ சவுபின் சாஹிர் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்த அழகிய குடும்ப போட்டோ,