விஜய் டிவி புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகர் ஸ்ரீ... நாயகி, இந்த சன் டிவி பிரபலம் தானா, புதிய ஜோடி
சீரியல்
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வந்த தொடர்கள் பல முடிவுக்கு வந்தது.
சுந்தரி, எதிர்நீச்சல், வானத்தை போல போன்ற தொடர்கள் எல்லாம் டிஆர்பியில் டாப்பில் இருந்த சீரியல்கள், ஆனால் முடித்துவிட்டனர். இப்போது புத்தம் புதிய சீரியல்கள் பல களமிறக்கி வருகிறார்கள்.
சன் டிவியில் முக்கிய தொடர்களில் நடித்து வந்த நடிகர்கள் பலர் இப்போது புதிய சீரியல்களில் கமிட்டாகிவிட்டனர். தற்போது அப்படி சன் டிவி தொடரில் நடித்துவந்த நடிகர்களின் ஒரு விவரம் வெளியாகியுள்ளது.
புதிய தொடர்
வானத்தை போல தொடரில் நாயகனாக நடித்துவந்த நடிகர் ஸ்ரீகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் தனம் என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அவருக்கு ஜோடியாக எதிர்நீச்சல் தொடரில் நடித்துவந்த சத்யா தேவராஜ் நாயகியாக நடிக்கிறாராம். இந்த சீரியலை Estrella Stories நிறுவனம் தயாரிக்கிறார்களாம்.