மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஸ்ரீ.. அவரது தற்போதைய நிலை, வெளிவந்த அறிக்கை
நடிகர் ஸ்ரீ
வழக்க எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்து தன்னை நிரூபித்தவர் நடிகர் ஸ்ரீ.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று திரைப்படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்தன.
இவரது வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆனார்கள். தலைமுடி கலர் செய்து, உடல் எடை சுத்தமாக மெலிந்து யாரோ போல் காணப்பட்டார்.
அதன்பின் நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து நிறைய பேர் சர்ச்சையாக பேசி வந்தனர்.
அறிக்கை
இந்த நிலையில் நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையில் உள்ளார். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார்.
அவர் குணமடைந்து நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால் அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
