விஜய் சொன்ன அந்த வார்த்தை, பேச்சால் கண்ணீர்.. நடிகர் உருக்கம்
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மட்டுமின்றி இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் விஜய் உடன் நெருக்கமாக இருக்கும் பல முக்கிய பிரபலங்களும் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீமன் கண்ணீர்
விஜய்யின் நண்பரும் பிரபல நடிகருமான ஸ்ரீமன் தற்போது உருக்கமாக X பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். விஜய் பேசியதை கேட்டபோது தான் சில நிமிடங்கள் கண்ணீர் விட்டதாக கூறியிருக்கிறார்.
அங்கு எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கும் ஸ்ரீமன், "இப்போதுதான் ஜனநாயகன் விழாவில் இருந்து வந்தேன். இதுதான் என்னுடைய கடைசி படம் என விஜய் முதல் முறையாக மைக்கில் கூறினார். அப்போது என்னை அறியாமலேயே கண்களில் இருந்து சில நொடிகள் கண்ணீர் வடிந்தது."
"அப்போது முகத்தை கழுவுவதற்காக எழுந்து சென்று விட்டேன். விஜிமா உன்னுடைய கடின உழைப்பு நிச்சயம் உன்னுடைய கனவுகளை எட்டுவதற்கு உதவும். அதற்கு எங்கள் பிரார்த்தனைகள்" என ஸ்ரீமன் பதிவிட்டு இருக்கிறார்.
Just back from Jananayagan function. This was the first time I heard him saying this is my last film on Mike, tears flowed without my knowledge for few seconds, I rushed to washroom to wash my face. Vjyma all your hard work will reach you to achieve your dreams, our prayers pic.twitter.com/adcLQ5ti8d
— actor sriman (@ActorSriman) December 30, 2025