தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு
நடிகை சுஜாதா
1950களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த மலையாள ஆசிரியர் சுஜாதாவின் தந்தை மேனன் ஆவார்.
டிகையின் தந்தை மேனன் சிறந்த விலங்கியல் ஆசிரியராக யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்பித்தார்.
இவரது மகள் சுஜாதா 1952ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார், இவருக்கு 14 வயது ஆகும் போது கேரளாவிற்கு சென்றுவிட்டார்.
சினிமா என்ட்ரி
ஜோசி பிரகாஷ் என்பவர் தான் முதல் முதலாக மேடை நாடகமான போலீஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தார்.
பின் தபாஷ்வினி என்ற மலையாளப் படத்தில் முதலில் தோன்றினாலும் எர்ணாகுளம் ஜங்சன் என் மலையாள படத்தின் போது தான் கே.பாலசந்தர் கண்களில் பட்டுள்ளார். 1974ல் பிரபல இயக்குனரான கே.பாலசந்தர் எடுத்த அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் நடிக்க அவருக்கு சிறந்த நடிகையாக தமிழ் திரையுலகிற்கு காட்டியது.
தொடர்ந்து அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள் நடிக்க அன்றைய பிரபல தமிழ் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
கடைசி படம்
நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருக்கிறார், இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் மட்டுமே.
இவர் நடித்த படங்களில் கடல் மீன், அந்தமான் காதலி, விதி, புனர் ஜென்மம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் இவருக்கு பாராட்டுக்களை வாங்கி கொடுத்த படங்களாகும்.
தமிழில் கடைசியாக 2004ம் ஆண்டு வரலாறு படம் நடித்தார், தெலுங்கில் 2006ம் ஆண்டு ஸ்ரீ ராம ராசு என்ற படத்தில் நடித்தார். விருதுகள் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி மற்றும் நந்தி விருதை பெற்றுள்ளார்.