சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் சுந்தரராஜன் மகன்களை பார்த்துள்ளீர்களா?- ஒருவர் இயக்குனரா, அழகிய குடும்ப போட்டோ
நடிகர் சுந்தரராஜன்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் சுந்தர்ராஜன்.
அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, எங்கிட்ட மோதாதே, திருமதி பழனிச்சாமி, சூரிய வம்சம் என பல வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதே நேரத்தில் ஆர். சுந்தர்ராஜன் கடைசியாக 2013 ஆம் ஆண்டில் சித்திரையில் நிலாச்சோறு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
குடும்பம்
சுந்தர்ராஜன் துர்கா என்ற டப்பிங் கலைஞரை திருமணம் செய்திருக்கிறார், இந்த தம்பதிக்கு கார்த்திக், தீபன், அசோக் என 3 மகன்கள் உள்ளனர், இதில் ஒருவர் 2004ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சுந்தர்ராஜன் தனது மகன்கள் மற்றும் மனைவி, மருமகள் என எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள், பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்கள் இவர்களா?- சோனியா அகர்வால் என யார் யார் பாருங்க