சூர்யாவின் மகள் தியா சூர்யா இயக்கியுள்ள Leading Light திரைப்படம்... ஆஸ்கருக்கு செல்கிறதா?
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி செம ஹிட்டடித்தது. அடுத்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்திற்காக ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தியா சூர்யா
தற்போது சூர்யா படத்தை தாண்டி ஒரு ஸ்பெஷல் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா-ஜோதிகா தங்களது மகள் தியா படிப்பிற்காக மும்பை குடியேறினார்கள். தியா கடந்த ஆண்டில் தனது படிப்பின் ஒரு பகுதியாக ஆவணப்படம் ஒன்றை இயக்கினார்.
Leading Light என்ற பெயரில் தியா உருவாக்கிய இந்த ஆவணப் படம் மாணவர்கள் அளவிலான குறும்பட போட்டியில் பரிசு வென்றது.
திரையுலகிற்கு பின்னார் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் ஆவணப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
பாராட்டுக்களை குவித்து வரும் இந்த படம் oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இந்த படம் திரையிடப்படுகிறதாம்.