சூர்யாவின் ஜாதகம், நடிக்க இஷ்டம் இல்லை ஆனால்.. சூர்யா குறித்து அப்பா சிவகுமார் ஓபன் டாக்
சூர்யா
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் இப்படம் வெளிவர உள்ள நிலையில், நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஓபன் டாக்
இதில் கலந்து கொண்ட சூர்யாவின் அப்பா சிவகுமார் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " சூர்யாவுக்கு சினிமாவில் சற்றும் இஷ்டம் இல்லை. அப்போது சூர்யா ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு முறை என் நண்பர் வீட்டுக்கு வந்தார்.
அவர் ஒரு ஜோசியர், சூர்யா மற்றும் கார்த்தியின் ஜாதகத்தை பார்த்து சூர்யா பெரிய நடிகர் ஆவார் என்று கூறினார். அந்த நேரத்தில் அவர் வார்த்தை மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

பின் இயக்குநர் வசந்த் சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் நடிக்க வைத்தார். அதன் பின், சூர்யாவின் நடிப்பை கண்டு பலர் வாய்ப்பு கொடுத்தனர். ஒவ்வொரு இயக்குநரும் சூர்யாவை செதுக்கி இன்றைக்கு இந்த இடத்திற்கு சூர்யா வர காரணமாக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu