வெற்றிகரமாக ஓடும் சீன் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்- எத்தனை கோடி?

By Yathrika Nov 07, 2026 12:41 PM GMT
Report

வாரா வாரம் தமிழ் சினிமாவில் நிறைய புத்தம்புதிய படங்கள் வெளியாகிறது.

இந்த வாரம் 3 பெரிய படங்கள் ரிலீஸ் ஆனது, ராமாயணா, சீன் மற்றும் மூக்குத்தி அம்மன். ஒவ்வொரு படமும் ஒரு விதமான கதைக்களத்தை கொண்டது. தற்போது நாம் இந்த பதிவில் சூர்யாவின் சீன் படம் குறித்து ஒரு விஷயத்தை காண்போம்.

வெற்றிகரமாக ஓடும் சீன் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்- எத்தனை கோடி? | Actor Suriya How Much He Paid For Scene Movie

சீன் படம்

ரோமாஞ்சம், ஆவேசம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் இயக்குனர் ஜித்து மாதவன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து எடுத்துள்ள திரைப்படம் சீன்.

வெற்றிகரமாக ஓடும் சீன் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்- எத்தனை கோடி? | Actor Suriya How Much He Paid For Scene Movie

மேலும் இதில் நஸ்ரியா நஸீம், நஸ்லென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். வழக்கமாக மாஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யாவை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு இந்த படம் முற்றிலும் வித்தியாசமான சூர்யாவை பார்த்திருப்பார்கள்.

படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு வித்தியாசமான திரைக்கதையாக அமைந்திருக்கிறது என்ற விமர்சனங்கள் நிறைய வந்துள்ளன.

வெற்றிகரமாக ஓடும் சீன் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்- எத்தனை கோடி? | Actor Suriya How Much He Paid For Scene Movie

கலெக்ஷன்

நேற்று (நவம்பர் 6) படம் வெளியாகிவிட்டது, இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் தமிழகத்தில் நேற்று முதல் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீன் முதல் நாள் உலகளவில் ரூ. 36 கோடிக்கு மேல வசூலித்துள்ளதாம்.

படம் வசூல் வேட்டை செய்ய தொடங்கிய நிலையில் இப்படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் என விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது சூர்யாவிற்கு சீன் படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US