வெளிவந்தது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் பட அப்டேட்.. வெறித்தனமான சம்பவம்!
வாடிவாசல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையிலும், படப்பிடிப்பு துவங்க சற்று தாமதமாகி கொண்டு இருந்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் முதல் முறையாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என தகவல் வெளியானது. மேலும், படத்தில் உண்மையான காளையுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான பயிற்சியிலும் சூர்யா ஈடுபட்டுள்ளார்.
வெறித்தனமான சம்பவம்!
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் தற்போது வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.