சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் படு மாஸ் ஹிட்டடித்த திரைப்படம் சூர்யாவில் கருப்பு.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூர்யா கருப்பண்ண சாமி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை அதிரவைத்துவிட்டார்.
மாஸ் வெற்றியை எதிர்ப்பார்த்த சூர்யாவிற்கு கருப்பு படம் வெற்றியாக அமைந்தது. அப்பட வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

பாக்ஸ் ஆபிஸ்
தெலுங்கு சினிமா பிரபலம் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா 40 வயதான விளையாட்டு வீரராக நடித்துள்ளார், அவருடன் மமிதா பைஜு, ராதிகா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குடும்ப உறவையும், காதலையும் மையமாக கொண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான இப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதுவரை சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் மொத்தமாக ரூ. 181 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.