சூர்யாவின் 44 படத்தின் படப்பிடிப்பு இந்த தீவில் நடக்கிறதா?... என்ன பிளான்
சூர்யா படம்
நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் அடுத்து பெரியதாக எதிர்ப்பார்க்கும் ஒரு படம் வாடிவாசல்.
சிவா இயக்கத்தில் படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் படு ஆவலாக உள்ளனர். சூர்யா நடிக்க இருக்கும் அவரது 44வது படம் குறித்து அண்மையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தான் நடிகர் சூர்யா அடுத்து நடிக்க இருக்கிறார்.
படப்பிடிப்பு
படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு தயாராகி வருகின்றனர்.
தற்போது படப்பிடிப்பு குறித்து வந்த தகவல் என்னவென்றால், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற இருப்பதாகவும் 40 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜுன் 2 முதல் அங்கு படப்பிடிப்பு நடக்க அடுத்து ஊட்டி மற்றும் சில இடங்களில் படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.
2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசை.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
