விஜய் போன்று அஜித் அரசியல் வருவாரா?.. ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். பல கோடி ரசிகர்களை சம்பாதித்த இவர் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லீ திரைப்படம் உருவாகி வருகிறது.
அஜித்தின் தீவிரமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் நிலையில், த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
அரசியல் வருவாரா
இந்த நிலையில் பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா அஜித் அரசியல் வருகை குறித்து சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், " விஜய் அரசியல் வந்தது மகிழ்ச்சி தான் ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சாதாரணமாகவே பெரிதாக பேசமாட்டார்.

அரசியல் குறித்து சுத்தமாக பேசமாட்டார். அது போன்று தான் தல அஜித்தும் அவர் அரசியல் பேச்சு எடுத்தாலே அமைதியாக இருப்பார். அவரிடம் சென்று விஜய் அரசியல் வந்து விட்டார்.
எப்போது நீங்கள் வருவீர்கள் என்று கேட்டால் அமைதியாக வாய்யை மூடி கொள்ளுமாறு கூறிவிட்டு சென்று விடுவார். அவருக்கு அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லை" என்று கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri