கடினமாக உள்ளது.. விஜய் அரசியல் வருகை குறித்து மனம் திறந்த நடிகர் நரேன்
நடிகர் நரேன்
2006 -ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நரேன். இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பு மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் நரேன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது, தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
நரேன் பேட்டி
இந்நிலையில், தளபதி 69 படத்தை பற்றியும் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் செய்தியாளர்களிடம் நரேன், அவரின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், " தளபதி 69 படம் நன்றாக செல்கிறது, ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். விஜய் சினிமா வாழக்கையில் இது தான் கடைசி படம் என்று யோசித்தால் கடினமாக தான் உள்ளது. ஆனால் விஜய் அரசியலில் சாதிக்க நினைக்கிறார், அவருக்கு ஆதரவாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.