விஜய்யின் மாஸ்டர் பட புகழ் நடிகர் உதய்க்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளதா?- கியூட் புகைப்படம்
உதய்
நடிகர் உதயதீப் 2003ம் ஆண்டு வெளியான ஆயுதம், திருடா திருடி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் உதய். அதன்பின் விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அப்படத்தை தொடர்ந்து 2010ம் ஆண்டு வெளிவந்த பானா காத்தாடி படத்தில் அதர்வா நண்பராக நடித்தார், 2019ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் உதய் நடித்திருந்தார்.
கடைசியாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு தான் உதயதீப் டுவிட்டரிலேயே இணைந்து இருக்கிறார்.

உதய் குடும்பம்
சின்னப்பையன் போல் இருக்கும் உதய்க்கு திருமணம் நடந்து ஒரு குழந்தையே உள்ளது. அவரது மனைவி திரௌபதி படத்தில் கதாநாயகியின் தங்கையாக ஜனனி கேரக்டரில் நடித்து இருக்கிறார்.
தற்போது உதய் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஜோடி டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி வருகிறார். இவரின் மகளின் புகைப்படம் வெளியாக அட இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri