வடிவேலு சம்பளம் இத்தனை கோடியா? பிரபல இயக்குனர் சொன்ன தகவல்
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் உச்ச காமெடியனாக இருந்தவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்து வருகிறார்.
மாமன்னன், மாரீசன் போன்ற படங்களில் முக்கிய ரோல்களில் நடித்த அவர் கேங்கர்ஸ் என்ற படத்தில் காமெடியாகவும் நடித்து இருந்தார்.

சம்பளம்
வடிவேலு தற்போது ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 15 கோடி ரூபாய். இந்த தகவலை இயக்குனர் பாரதி கண்ணன் கூறி இருக்கிறார்.
"நாங்க பார்த்த வடிவேலு வேற. இப்போது இருக்கும் வடிவேலு வேற. அந்த காலத்தில் வடிவேலு சூனா பானா ரோலில் லுங்கி கட்டி பீடி பிடித்தபடி எதார்த்தமாக நடித்து இருப்பார். மக்களில் ஒருவராக அவரை பார்த்தார்கள். ஆனால் தற்போது ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் போல காரில் இறங்கி, ஷூவை காட்டி.. எதை எதையோ காட்டி வருகிறார். அது எப்படி மக்களுடன் ஒட்டும்" என இயக்குனர் பாரதி கண்ணன் கேட்டிருக்கிறார்.

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri