அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கும் அவரது மகன்.. புகைப்படம் இதோ
நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு நகைச்சுவை கிங் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர், 2017ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தடை செய்யப்பட்டு இருந்தார்.
இதனால் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. பின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதனை தொடர்ந்து வெளிவந்த மாமன்னன் படத்தில் சீரியசமான ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் கேங்கர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் மாரிசன் எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவின் மகன்
இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் மகன் சுப்ரமணியன் புகைப்படம் வெளியாகியுள்ளது. அச்சு அசல் அப்படியே வடிவேலு போலவே இருக்கும் இவருடைய புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதோ அவரின் புகைப்படம்..


