இரிடியம் மோசடியில் கோடிக்கணக்கில் ஏமாந்த நடிகர் விக்னேஷ்! போலிஸில் அதிர்ச்சி புகார்

Crime Actor Scam Vignesh Iridiyum
By Parthiban.A Mar 22, 2022 12:50 PM GMT
Report

90களில் தொடங்கி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து இருப்பவர் விக்னேஷ். பசும்பொன், செல்லக்கண்ணு, பொங்கலோ பொங்கல், கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார் விக்னேஷ்.

போலீசில் புகார்

தற்போது விக்னேஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்து இருக்கிறார். அதில் தன்னை ஏமாற்றி 1.80 கோடி ருபாய் பெற்று ஏமாற்றிய இரிடியம் மோசடி கும்பல் பற்றி தெரிவித்து இருக்கிறார்.

30 வருடங்கள் சினிமாவில் நடிகராக இருந்த தான் தற்போது சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும், தன்னை ராம்பிரபு என்பவர் நட்பாக பழகி பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

இரிடியம் மோசடியில் கோடிக்கணக்கில் ஏமாந்த நடிகர் விக்னேஷ்! போலிஸில் அதிர்ச்சி புகார் | Actor Vignesh Police Complaint On Iridiyum Scam

இரிடியம் மோசடி

"என் கடையை வாடகைக்கு எடுத்த ராம் பிரபு தினமும் துப்பாக்கி இந்திய பாதுகாவலர்கள் உடன் வருவார். அவர் விஐபி என நான் நம்பினேன். தான் இரிடியம் ஆஸ்திரேலியாவுக்கு 3 லட்சம் கோடிக்கு விற்றதால் மத்திய அரசு தனக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கிறது என கூறினார்."

"அவருடன் நட்பாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. தான் சட்டப்படி இரிடியம் விற்கும் தொழில் செய்வதாக கூறினார். அதில் விற்பனை செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் ஆவர் சொன்னார். அதை நம்பி அதற்காக நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்."

இரிடியம் மோசடியில் கோடிக்கணக்கில் ஏமாந்த நடிகர் விக்னேஷ்! போலிஸில் அதிர்ச்சி புகார் | Actor Vignesh Police Complaint On Iridiyum Scam

"5 லட்சம் கொடுத்தால் 500 கோடியாக திருப்பி தருகிறேன் என சொன்னார். நான் அதை நம்பி அவரிடம் 1.81 கோடி ருபாய் கொடுத்தேன். அதற்கு பிறகு என்னிடம் பேசுவதை தவிர்த்தார். பணம் கேட்டதற்கு 500 கோடி கன்டெய்னரில் வருகிறது என கூறினார்."

"அதன் பின் தான் அவர் மோசடி பேர்வழி என்றும், பலரையும் இப்படி ஏமாற்றி இருக்கிறார் என்பதும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விக்னேஷ் தெரிவித்து உள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US