அரசியல் களம், சந்தோஷமான செய்தி சொன்ன விஜய்- கூடவே வந்த சோகமான செய்தி
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கராக இருந்து வருபவர் விஜய். இவரது படங்கள் ரிலீஸ் என்றாலே கோலாகலமாக இருக்கும், அதிலும் முதல்நாள் முதல் காட்சி எல்லாம் தாறுமாறான கொண்டாட்டங்களாக இருக்கும்.
கடைசியாக விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி இருந்தது, படமும் நல்ல விமர்சனம் பெற செம வசூல் வேட்டையும் நடத்தி வந்தது.
இப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கான படப்பிடிப்புகளும் வேகமாக நடந்து வருகிறது.
சோக செய்தி
ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்ப்பார்த்த அந்த ஒரு நாள் இன்று வந்துவிட்டது, அதாவது விஜய் அரசியலில் ஈடுபடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்பது தனது கட்சி பெயர் என்பதையும் அறிவித்துவிட்டார்.
இந்த செய்தி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் கூடவே ஒரு சோகமான செய்தி வந்துள்ளது. அதாவது விஜய் இதுவரை ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு முழுவதுமாக அரசியலில் ஈடுபட உள்ளாராம்.
அரசியல் செய்தி சந்தோஷம் என்றாலும் விஜய் இனி நடிக்கப்போவதில்லை என்பதை கேட்டு ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளனர்.

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
