விஜயகாந்த் குறித்து நடிகர் விஜய் சொன்ன அந்த விஷயம்- வைரலாகும் தகவல்
கேப்டன்
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கேப்டன் விஜயகாந்த் பற்றி தான் பேசி வருகிறார்கள். நேற்று (டிசம்பர் 28) உடவ்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எப்படி அவர் வாழ்ந்துள்ளார் என்பது அவரது மறைவு செய்தி வந்த பிறகே அனைவருக்கும் அதிகம் தெரிய வந்துள்ளது.
ரசிகர்கள், தொண்டர்களின் கண்ணீருக்கு நடுவில் விஜயகாந்த் மிகவும் அமைதியான முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்த் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவர் நினைவுகள் எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.
விஜய் பேச்சு
நடிகர் விஜயகாந்த் குறித்து விஜய் முன்பு பேசிய ஒரு வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதில் அவர், கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ்னு 2 பேரு இருக்காங்க, அது மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்கல்ல அவங்க நடிகன நடிகனா ஒத்துக்கணும், அது ரொம்ப முக்கியம். அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஒரு பெரிய ஹீரோனா அது அண்ணன் விஜயகாந்த் தான்.
செந்தூரப்பாண்டி படத்தில் அவருக்கு தம்பியாக நான் பண்ணினேன், அவர் மூலமாக நான் ரசிகர்களுக்கு அறிமுகமாகுறேன் என பேசியுள்ளார்.