செருப்பு இல்லாமல் நடப்பதால் அப்படி ஆகிறது, எனவே தான் காலணி அணிவது இல்லை- விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்து பின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி.
இவரது இசையில் வெளிவந்த நாக்கு முக்கா, ஆத்திச்சூடி, மச்சக்கன்னி, மஸ்காரா, மாக்காயேலா போன்ற பல பாடல்கள் இப்போதும் மக்களின் ஆல்டைம் பேவரெட் பாடலாக அமைந்து வருகிறது.
நான் படம் மூலம் நடிகரான இவர் சசி இயக்கிய பிச்சைக்காரன் படம் மூலம் சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ படம் வெளியான, படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சொன்ன காரணம்
விஜய் ஆண்டனி அவரது மகளின் இறப்பிற்கு பிறகு ஒரு விஷயத்தை செய்து வருகிறார். அதாவது எங்கே வந்தாலும் காலில் செருப்பு இல்லாமல் தான் வருகிறார்.
இதுகுறித்து அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது, செருப்பு போடாமல் இருப்பது மனதிற்கு அமைதி தருகிறது, அது உடல்நலத்திற்கும் நல்லது, நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
நான் எப்போது செருப்பு இல்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அன்று முதல் எந்த விதமான நெருக்கடியான சூழலும் எனக்கு வரவில்லை.
வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறேன், இது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என பேசியுள்ளார்.