விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இன்றோடு 2 வருடம்- படம் செய்த மொத்த வசூல்
விஜய்யின் பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைக்க சுமார் 150 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவானது.
விமர்சன ரீதியாக படம் டல் அடித்தாலும் விஜய் என்ற ஒருவரின் பெயருக்காகவே படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்திருந்தது.
மொத்த வசூல்
படம் வெளியாகி இன்றோடு 2 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் வழக்கம் போல் டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகிறார்கள்.
சரி இப்படம் எல்லா ஏரியாக்களிலும் எவ்வளவு வசூலித்தது என்ற விவரத்தை காண்போம்.
- தமிழ்நாடு- ரூ. 113 கோடி
- ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 12.5 கோடி
- கேரளா- ரூ. 11 கோடி
- கர்நாடகா- ரூ. 14 கோடி
- ROI- ரூ. 3 கோடி
- ஓவர்சீஸ்- ரூ. 62 கோடி
மொத்தமாக படம் எல்லா ஏரியாக்களையும் சேர்த்து ரூ. 215.5 கோடி வரை வசூலித்துள்ளது.