முடிவுக்கு வந்த நடிகர் விஜய் கார் இறக்குமதி வழக்கு- நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
நடிகர் விஜய் தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதியாக கொண்டாடப்படும் பிரபலம். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி ரசிகர்களை எப்போதும் கவனிக்கக் கூடியவர்.
2005ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.
எனவே விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூ நுழைவு வரி செலுத்தப்பட்டது. வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதம் விதிக்கப்பட அதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர, 2019ம் ஆண்டிற்கு முன்னர் முழு நுழைவு வரியும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது.
2019ம் ஜனவரிக்கு பின்னும் வரியை முழுமையாக செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உடல்நலக் குறைவால் நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்- ரசிகர்கள் ஷாக்
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri