நடிகர் விஜய் சொந்தமாக இத்தனை விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- நண்பரே கூறிய லிஸ்ட்
நடிகர் விஜய்
இளைய தளபதி விஜய் என்று எந்த மேடையில் கூறினாலும் காது கிழியும் அளவிற்கு சத்தம் கேட்கும், அந்த அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
தென்னிந்திய சினிமா நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய் சிறுவயதில் இருந்தே நடிக்க தொடங்கியவர். ரஜினியை தொடர்ந்து ரூ. 100 கோடிக்கு சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ள விஜய் இப்போது லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தளபதி ரசிகர்கள் லியோ படத்தை காண்பதற்காக மிகுந்த ஆவலில் உள்ளார்கள்.
விஜய்யின் கார்கள்
பிரபலங்களில் கார், பைக் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவரில் விஜய்யும் உள்ளார்.
3 பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மறைந்த நடிகர் மாரிமுத்து- யார் அவர்கள் தெரியுமா?
விஜய் சொந்தமாக என்னென்ன கார்கள் வைத்துள்ளார் என அவரது நெருங்கிய நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதோ அவர் கூறிய லிஸ்ட்,
- டாடா எஸ்டேட் 1992 - 2000 மாடல்
- டொயோட்டா செரா 1990 - 1996 மாடல்
- டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா
- ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம்
- BMW X6 - 2008–தற்போதைய மாடல்
- நிசான் எக்ஸ்-டிரெயில் - 2000
- ஆடி ஏ8
- பிரீமியர் 118 NE
- மினி கூப்பர் எஸ்