நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த நாயகிகள்- யார் யார் தெரியுமா?
நடிகர் விஜய்
ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் பெரிய நடிகரின் படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.
கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்திலோ 9 மணிக்கு தான் முதல் ஷோவே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமான விஷயமாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
பிடித்த நாயகிகள்
நடிகர் விஜய் இப்போதெல்லாம் அவ்வளவாக பேட்டிகள் கொடுப்பது இல்லை, ஆனால் சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த நாயகிகள் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அவருக்கு மிகவும் பிடித்த நாயகிகள் என்றால் நதியா, ரேவதி, அமலா என இந்த 3 நாயகிகள் தானாம்.