விஜய்யின் முதல் பட நாயகியை நியாபகம் இருக்கா?- இப்போது சீரியல்கள் எல்லாம் நடிக்கிறாரா?
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய்.
இவரின் 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் வேகமாக நடந்து வருகிறது, அடுத்து எப்போது படக்குழு அப்டேட் விடுவார்கள் என ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கும் நடிகர் விஜய் முதன்முதலாக நடித்த திரைப்படம் நாளைய தீர்ப்பு. 1992ம் ஆன்டு விஜய் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கீர்த்தனா.
இப்படம் வெளியாகி மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது என்று சொல்லலாம், அதிலும் நடிகை கீர்த்தனாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகை பற்றிய தகவல்
கீர்த்தனா அப்படத்திற்கு பிறகு சூரியன் சந்திரன், விஜயகாந்தின் பதவிப்பிரமாணம், பவித்ரா, மைனர் மாப்பிள்ளை, தாய் தங்கை பாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பின் துணை கதாபாத்திரங்கள் வர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். இப்போது படங்களை தாண்டி சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
சன் டிவியில் வெளியான அன்பே வா சீரியலில் அருள்வாக்கு வேதவல்லியாக நடித்து மிகவும் பாப்புலர் ஆனார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கீர்த்தனா
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் நடித்து வருகிறார். இதோ பாருங்கள் அவரது புகைப்படம்,

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
