ஒவ்வொரு பிறந்தநாளும் நடிகர் விஜய் தவறாக செல்லும் ஒரு முக்கிய இடம்- எங்கே தெரியுமா?
நடிகர் விஜய்
இப்போது ரசிகர்களால் அதிகம் பேசப்படும் நாயகனாக இருக்கிறார் விஜய். காரணம் அவரது லியோ படம் குறித்து அடிக்கடி தகவல்கள் வர ரசிகர்கள் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது அதாவது நேற்று ஏப்ரல் 2ம் தேதி விஜய் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது 4 மில்லியன் வரை பாலோவர்களை பெற்றுள்ளார், வரும் நாட்களிலும் பாலோவர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக உயரம் என்கின்றனர்.
விஜய்யின் பிறந்தநாள்
அதாவது ஜுன் 22ம் தேதி செம வெயிட்டான ஒரு அப்டேட் உள்ளது என தயாரிப்பாளர் லலித் ஏற்கெனவே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். விஜய் தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஸ்பெஷலாக ஒரு இடத்திற்கு செல்வாராம்.
அதாவது அவர் எழும்பூரில் இருக்கும் தாய்சேய் அரசு மருத்துவமனைக்கு சென்று அன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவாராம்.
2011ம் ஆண்டு வரை இதை வழக்கமாக வைத்திருந்த விஜய் அதன்பிறகு தனது உதவியாளரை அனுப்பி இந்த விஷயத்தை செய்து வருகிறாராம்.
தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?